பச்சைப் பசுங்கிளியே! வா! வா!

பாலும் பழமருந்த வா! வா!

உச்சி மரத்தைவிட்டு வா! வா!

உயர பறந்துகத்தி வா! வா!

 

மூக்கு சிவந்தபச்சைக் கிளியே

முத்தம் பலதருவேன் வா! வா!

தேக்கு மர(த்)துஊஞ்சல் ஏறிச்

சிரித்துக் குதித்திடுவோம் வா! வா!

 

கூண்டில் அடைக்கமாட்டேன் வா! வா!

கோவைப் பழந்தருவேன் வா! வா!

வேண்டும் பொழுதோடு வா! வா!

விளையாடு வோம்விரைந்தே வா! வா!

– கவிஞர் வாணிதாசன்