குடி போதை ஏற்படுத்தும் தீமைகளைத் திருக்குறள் வடிவில் எடுத்துரைக்கிறார் தா.வ.சாரதி.
குடிபோதை உள்ளார் குலத்துக்கு தீங்கு
அடிகண்டால் தூர விலக்கு
தன்மக்கள் வாழ்வை தரமாக வைப்பார்
என்றும் மதுவை நினையார்
இளமையில் போதை இனிக்கும் வரும்நாள்
களங்கம் வருத்தம் தரும்
எழுவார் விழுவார் எழமுயல்வார் போதை
தழுவுவார் வாழ்வு அழியும்
மதுவினால் ஆவது யாதெனில் நல்லார்
குதூகலத்தை வீணாய் கெடுக்கும்
பெரியோர் சிறியோர் பெயறியாது போதை
ஏறினால் யாவும் கெடும்
தீமையென்ற பின்னரும் தேடி அலைவாரை
இமைப்பொழுதும் கொன்று விடும்
தெளிந்த மனதில் தெரிந்தும் புகாது
களித்திடும் போதைப் பொருள்
முயன்று முறியடித்து போதைத் தவிர்த்தல்
தயக்கமின்றி வெற்றித் தரும்
எதுவும் எளிதாகும் எல்லாம் நலமாகும்
மதுவை விடுவார் தமக்கு
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!