குடைபோல் நீ

நெருப்பை அள்ளிக் கொட்டினாற் போல் வெய்யில் தகித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் கால் வயிற்றுக் கஞ்சிக்காக உழைக்கும் வர்க்கங்களைத் தவிர வேறு எவரும் அதிகமாக சாலையில் நடமாடியதாகத் தெரியவில்லை. குளிர்பானக் கடைகளை ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவரும் குத்தகைக்கு எடுத்திருந்தனர். ‘குளிரக் குளிர ஒரு மழை பெய்யதா?’ என்கிற ஏக்கம் பெருமூச்சு வடிவில் ஒவ்வொருவரிடமும் காணப்பட்டது. ‘வெயில் காலங்களில் மழைக்காக ஏங்குவதும், மழைகாலங்களில் வெயிலுக்காக ஏங்குவதும் சகஜமாகிவிட்ட வாழ்க்கையில் மனிதன் நினைப்பது போல் எல்லாம் நடந்துவிடுமா என்ன? … குடைபோல் நீ-ஐ படிப்பதைத் தொடரவும்.