விரித்துக் காட்டிய தோகையில் தெரிகிறது
மழையை வரவேற்கும் வாசகம்…
சுட்டெரித்த சூரியனும் சூன்யமானது
விழுங்கி விலகாது நின்ற மேகத்தால்…
மரம் செடிகொடிகளை ஆட வைத்து
அழகு காட்டிக் கொண்டிருக்கிறது காற்று …
நனைந்த பின் கோதிக் கொள்ள
அலகுகளைக் கூர் பார்த்துக் கொள்கிறது பறவை…
குளிர்காற்றில் குறைந்துபோகும் முட்டைகளின் சூட்டை
சமன்படுத்திக் கொள்ளத் தயாராகின்றன ரெக்கைகள் …
அடர்ந்து பறந்த தும்பிகள் அதுவாக
நகர்ந்து விடுகின்றன எங்கோ அடங்குவதற்கு …
தொடங்கப் போகிறது தூரல்!
குடையைத் தேடித் திரிகின்றன கைகள்..!!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!