தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி மாவு – 100 கிராம்
கோதுமை மாவு – 100 கிராம்
பொடித்த சர்க்கரை – 350 கிராம்
நெய் – 300 கிராம்
முந்திரி பருப்பு – 50 கிராம்
ஏலக்காய் பொடித்தது – சிறிதளவு
பால் – ½ லிட்டர்
தண்ணீர் – 1 ½ லிட்டர்
செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் 100 கிராம் நெய் ஊற்றி குதிரை வாலி அரிசி மாவு, கோதுமை மாவு ஆகியவற்றை தனித்தனியே நன்கு வறுக்கவும்.
பின் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதனுடன் வறுத்தமாவை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின் அரை லிட்டர் பால் சேர்க்கவும்.
இக்கலவை கெட்டியாக வரும் போது சர்க்கரையை சேர்க்கவும். அல்வா பதத்திற்கு திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரியும் வரை விடாமல் கிளறவும்.
வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக்கவும். சுவையான குதிரைவாலி அரிசி அல்வா ரெடி.