குமாரஸ்தவம்

குமாரஸ்தவம் என்னும் முருகனைப் பற்றிய பாடலானது பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த பாடல்களில் முருகனின் புகழ் பெரிதும் போற்றப்படுவதோடு தத்துவ உண்மைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

முருகனைப் பற்றிய பாடல்களில் இது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்வின் ஏற்படும் பல்வேறு துன்பங்கள் மற்றும் நோயிலிருந்து விடுபட குமாரஸ்தவம் பக்தர்களால் பாராய‌ணம் செய்யப்படுகிறது.

1918-ல் பாம்பன் சுவாமிகளால் குமாரஸ்தவம் எழுதப்பட்டது.  பாம்பன் சுவாமிகள் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை முருகப் பெருமானை வழிபாடு செய்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமாரஸ்தவம் பாராயணம் செய்ய நோய்கள் நீங்கும். மனவலிமை கூடும். நெருக்கடியான பிரச்சனைகள் தீரும்.

 
 
 

ஓம் ஷண்முக பதயே நமோ நம 

ஓம் ஷண்மத பதயே நமோ நம 

ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம

ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம

ஓம் ஷட்கோண பதயே நமோ நம

ஓம் ஷட்கோச பதயே நமோ நம

ஓம் நவநிதி பதயே நமோ நம

ஓம் சுபநிதி பதயே நமோ நம

ஓம் நரபதி பதயே நமோ நம

ஓம் சுரபதி பதயே நமோ நம

ஓம் நடச்சிவ பதயே நமோ நம

ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம

ஓம் கவிராஜ பதயே நமோ நம

ஓம் தபராஜ பதயே நமோ நம

ஓம் இகபர பதயே நமோ நம

ஓம் புகழ்முனி பதயே நமோ நம

ஓம் ஜயஜய பதயே நமோ நம

ஓம் நயநய பதயே நமோ நம

ஓம் மஞ்சுள பதயே நமோ நம

ஓம் குஞ்சரி பதயே நமோ நம

ஓம் வல்லீ பதயே நமோ நம

ஓம் மல்ல பதயே நமோ நம

ஓம் அஸ்த்ர பதயே நமோ நம

ஓம் சஸ்த்ர பதயே நமோ நம

ஓம் ஷஷ்டி பதயே நமோ நம

ஓம் இஷ்டி பதயே நமோ நம

ஓம் அபேத பதயே நமோ நம

ஓம் சுபோத பதயே நமோ நம

ஓம் வியூஹ பதயே நமோ நம

ஓம் மயூர பதயே நமோ நம

ஓம் பூத பதயே நமோ நம

ஓம் வேத பதயே நமோ நம

ஓம் புராண பதயே நமோ நம

ஓம் பிராண பதயே நமோ நம

ஓம் பக்த பதயே நமோ நம

ஓம் முக்த பதயே நமோ நம

ஓம் அகார பதயே நமோ நம

ஓம் உகார பதயே நமோ நம

ஓம் மகார பதயே நமோ நம

ஓம் விகாச பதயே நமோ நம

ஓம் ஆதி பதயே நமோ நம

ஓம் பூதி பதயே நமோ நம

ஓம் அமார பதயே நமோ நம

ஓம் குமார பதயே நமோ நம

 

விளக்கம்

ஓம் ஷண்முக பதயே நமோ நம
(ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)  ஓம் ஷண்மத பதயே நமோ நம
(ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)

         ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம

(ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம
(ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்)

ஓம் ஷட்கோண பதயே நமோ நம
(ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் ஷட்கோச பதயே நமோ நம
(ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் நவநிதி பதயே நமோ நம
(ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் சுபநிதி பதயே நமோ நம
(ஓம் பேரின்பச் செல்வத்தின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் நரபதி பதயே நமோ நம
(ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் சுரபதி பதயே நமோ நம
(ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் நடச்சிவ பதயே நமோ நம
(ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
(ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் )

ஓம் கவிராஜ பதயே நமோ நம
(ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் தபராஜ பதயே நமோ நம
(ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்)

ஓம் இகபர பதயே நமோ நம
(ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் புகழ்முனி பதயே நமோ நம
(ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் ஜயஜய பதயே நமோ நம
(ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்)

ஓம் நயநய பதயே நமோ நம
(ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் மஞ்சுள பதயே நமோ நம
(ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்)

ஓம் குஞ்சரி பதயே நமோ நம
(ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் வல்லீ பதயே நமோ நம
(ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்)

ஓம் மல்ல பதயே நமோ நம
(ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்)

ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
(ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
(ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
(ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் இஷ்டி பதயே நமோ நம
(ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் அபேத பதயே நமோ நம
(ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்)

ஓம் சுபோத பதயே நமோ நம
(ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் வியூஹ பதயே நமோ நம
(ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் மயூர பதயே நமோ நம
(ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்)

ஓம் பூத பதயே நமோ நம
(ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் வேத பதயே நமோ நம
(ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் புராண பதயே நமோ நம
(ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் பிராண பதயே நமோ நம
(ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் பக்த பதயே நமோ நம
(ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் முக்த பதயே நமோ நம
(ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

ஓம் அகார பதயே நமோ நம
(ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் உகார பதயே நமோ நம
(ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் மகார பதயே நமோ நம
(ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் விகாச பதயே நமோ நம
(ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்)

ஓம் ஆதி பதயே நமோ நம
(ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்)

ஓம் பூதி பதயே நமோ நம
(ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்)

ஓம் அமார பதயே நமோ நம
(ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்)

ஓம் குமார பதயே நமோ நம
(ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்)

குமாரஸ்தவம் முற்றிற்று

 

One Reply to “குமாரஸ்தவம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.