குயட் ஃபயரிங்

குயட் ஃபயரிங்

குயட் ஃபயரிங் (Quiet firing) என்பது இன்றைய மேலாண்மை உலகில் பின்பற்றப்படும் ஒரு செயல். அது பற்றிப் பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வேலைக்கு சேர்த்துக் கொளளப்பட்ட ஒருவர், பணியில் சோபிக்காமல் ஏனோ தானோ என்று இருந்தால் அவர் நாம் மேற்கூறியது போல் நடத்தப்பட்டால் அதனைக் குறை சொல்ல முடியாது.

ஓரம் கட்டப்படும் போது ஓயாது உழைத்த மனிதனால் இப்படி நடத்தப்படுவதை தாங்க இயலாது.

டீம் லீடர் எனப்படும் தலைமைப் பொறுப்பாளரை விட கெட்டிக்காரர் ஆக உள்ள குழு உறுப்பினர்களையும் பாராட்டி வேலையை வாங்குவது என்பது சிறந்த தலைமைப் பண்பின் அடையாளம்.

மாறாக, கெட்டிக்காரர் ஆக இருப்பவரை Quiet firing மூலம் தவிர்க்க நினைப்பது, அவராக விலகிக் கொள்ளும் நிலையில் கொண்டு நிறுத்துவது டீம் லீடருக்கு ஒரு வித அல்ப மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால், அது டீமுக்கும் நிறுவனத்துக்கும் நன்மை பயக்காது.

சரி. Quiet firing தமக்கு நடக்கிறது என்பதை ஒரு ஊழியர் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உணர்ச்சி வசப்படாமல், தம்முடைய மேலதிகாரி அல்லது மேலாளரிடம் இது குறித்து அவரிடம் மனம் விட்டுப் பேசிப் பார்க்க வேண்டும்.

ஒதுக்கப்படுவதற்கான காரணத்தை கோபப்படாமல் கேட்க வேண்டும். நீங்கள் உரையாடல் மேற்கொண்ட பின்னரும் நிலைமை மாறா விட்டால் நீங்கள் வேறு நிறுவனத்திற்கோ வேறு பணிக்கோ போக வேண்டும்.

‘எங்கே போய் விடும் காலம்? அது என்னையும் வாழ வைக்கும்!’ என்ற கவிஞர் வாலியின் திரைப்பாடல் பல்லவியில் கூறப்படுவது போல், மன உறுதியுடன் உத்யோக வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி நடை போட வேண்டும்.

(தேவை கருதி ஆங்கில சொற்கள் கையாளப்பட்டன)

எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com