குயிலோசை கேட்கின்ற அதிகாலை பொழுது…
அடியே உன் நடை தனிலே தெரிகின்ற அழகு…
மயிலென்ன மானென்ன உன் முன்னே எழுந்து…
மயக்கத்தில் ஆழ்ந்திடுமே உன்அருகாமை கடந்து…
வெயில் என்ன மழை என்ன உன்னை கண்ட பிறகு…
வேரென்ன விழுதென்ன எல்லாமே உறவு…
தயிரென்ன பாலென்ன தாளாது உணவு…
தயங்காது சொல்வேனே நீதான் என் உயிரு…
கயிறென்ன பாம்பென்ன பேதங்கள் மறந்து…
கண்ணே உன் கண்ணசைவில் நான் கிடந்தேன் விழுந்து…
வயிரங்கள் ஜொலித்தென்ன வண்ணங்கள் விரிந்தென்ன…
வான்மதியே உன்காலடியில் நான் என்னை இழந்தேன்…
பயில்கின்ற பாடங்கள் கேட்கின்ற நாதங்கள்…
பைந்தமிழின் இசைதந்த பாடலதின் ராகங்கள்…
துயில்கின்ற பொழுதிலும் சுகமான தழுவல்கள்…
தூயவளே என்னவளே உன் முகத்தின் நினைவலைகள்…
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்