குருவருளே சித்திக்கும்!

உலகோர்கள் நலம் பெறவேக்

கூரத்தில் அவதரித்தார்

குலமெல்லாம் தழைத்திடவே

குருபீடம் அலங்கரித்தார்

காலமெல்லாம் உடையவரின் திருவடியில்

ஒதுங்கி நின்றார்

களங்கமில்லா இன்தொண்டு

நாநாளும் புரிந்து நின்றார்!

எத்தனையோ சாதனைகள்

இவர் வாழ்வில் முடிந்திற்று

இத்தனையும் இவரால்தான்

வியப்பில்லை உயர்ந்திற்று

அத்தனையும் மெத்தணையான்

திருவருளால் நடந்திற்று…

பட்டினியாய் பலகாலம்

நினைவெல்லாம் திருக்கோலம்

திட்டமிட்டு செயலாக்கும்

அலங்காரம் அழகாகும்

எட்டெழுத்து மந்திரத்தை

உச்சரித்தே எக்காலம்…

மாமுனிவன் தாள்பணிந்து

அவர் வழிதான் பின்தொடர்ந்து

ஆமுதல்வன் கனவினையிவர் முடித்தார்

நல்நினைவாய் ஆமிவரே

நம்மிடையே நாம் கண்ட நல்குரவே!

நல்நாளதுவே தொடங்கும்

குருவருளே சித்திக்கும்

அல்லலெல்லாம் விலகும்

நாம் தொட்டதெல்லாம் இனி சிறக்கும்

நல்லதெல்லாம் நடக்கும்

இப்பொழுதே நன்மை பயக்கும்

இல்லமெல்லாம் இவர் அருளால்

இன்பமயமாய் ஒளி வருமே!!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.