குருவைப் பணிந்து உய்வடைவோம்
இருளும் அகன்று தெளிவடைவோம்
முறையாய் கேட்டு பயனடைவோம்
மறையின் பொருளை உணர்ந்திடுவோம்
அறத்தின் வழியில் நடந்திடுவோம்
துறப்போம் வெறுப்பை மகிழ்ந்திடுவோம்
நற்றுக் கற்ற கல்விதன்னை
உற்றார் சுற்றம் ஓதிடுவோம்
அறியார் அறிய உண்மைகளை
அறிந்து நன்மை செய்திடுவோம்
என்றும் குருவை பணிந்திடுவோம்
நன்றாய் வாழ்ந்து புகழ்பெறுவோம்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com