தொங்கும் பாலங்களாய் உறவுகள்
தள்ளாடி நடக்கும் முதியோர் கைபோல் பாசங்கள்
விளக்கெண்ணெய் போல் வளவளக்கும் பந்தங்கள்
வாழைப்பழத் தோல் போல் நேசங்கள்
எல்லாமே வழுக்கிவிழும் உறவுகள்
எதை நம்பி நடப்பாய் இளைஞா? பாவமடா நீ
எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாத தூரத்தில் உன் சந்தோசம்
முட்டி முட்டி பார்த்தாலும் முயலாத தூரத்தில் உன் மகிழ்ச்சி
பார்த்து பார்த்து நடந்தாலும் நடைபாதையில்லா பயணம்
ஒற்றையடிப் பாதையில் நடப்பது கடினம்தான் தோழா!
முயன்று பார் வெற்றிக்கனி
கிடைத்தாலும் கிடைக்கலாம் உன் சொந்த பந்தத்தை
விட்டு நீ விலகும்போது குருவை அடையும்போது.
– சுருதி