குறுக்கெழுத்துப் புதிர் – 1

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

இடமிருந்து வலம்

1 . கொடிய வகை நோய் தொற்று

3. மதில் மேல் இது

5. ஆறு

8. ஆய __ 64 ஆகும்

12. ஓர் இசைக் கருவி

16. பேருந்து பயணம் என்றால் இதன் மீதுதான்

19 .மீனா நடித்த படங்களில் இதுவும் ஒன்று

22. மலையைப்போல காட்சியளிக்கும் ஆனால் அளவில் சிறியது

வலமிருந்து இடம்

7. ஆம் என்பதன் வேறு சொல்

9. நறுமணம்

10. காற்று

11. நடிகைகளில் ஒருவர்

14. பட்ஜெட்டின்போது இதையும் தாக்கல் செய்வார்கள்

17. வேதாரண்யம் என்றவுடன் நினைவுக்கு வருவது

18. இளைஞர்கள் இப்படி சொல்லிக் கொள்வதுண்டு

21 பரமசிவனின் துணைவியார்

23 விளையாட்டு வீரர்களுக்கு பெரும்பாலும் இது பிடித்துக் கொண்டு பாடாய் படுத்துவதுண்டு

24. சில படங்கள் இதற்காக எடுக்கப்படுவதுண்டு

மேலிருந்து கீழ்

1. டெங்கு என்றவுடன் நினைவுக்கு வருவது

2. கணித அறிவியலின் தந்தை

3. காலை சிற்றுண்டி வகைகளில் ஒன்று

4. தேர் என்றவுடன் நினைவுக்கு வரும் ஊர்

6. மீன் பிடிக்க விரிப்பது

14. ஆ ணும் பெண்ணும் சம__ பெற பாரதியார் எண்ணினார்

17. __ அடி (படத்தின் பெயர்)

20. திட்டுவதை இது பாடுவதாக சொல்வார்கள்

23. தமிழகத்தில் குறைந்த அளவு பெண்கள் வசிக்கும் மாவட்டம்

24 அறம் செய்ய

கீழிருந்து மேல்

12. ஒரு வகை பழம்

13. சொத்து வரியை இப்படியும் சொல்வார்கள்

15. போஸ்டர்கள் ஒட்ட தேவையானது

16. இது இல்லை என்று பாடினார் பாரதி

22. கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதன்முறை MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட‌ தொகுதி

வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.