குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.
குறுக்கெழுத்துப் புதிர் - 9 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இடமிருந்து வலம்
1) ____ மலர். சிவாஜி படம்
4) ஒரு செல் உயிரினம்
5) பாலூட்டி இனத்தைச் சார்ந்த ஒரு விலங்கு
7) ரவாவைக் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு வகை
9) சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுப் பொருள்
17) மசாலாவின் முக்கிய பொருள்
26) ஜல்லிக்கட்டு ஹீரோ
28) வாலில் விஷத்தைக் கொண்டுள்ள விலங்கு
வலமிருந்து இடம்
3) 40 வயதை ஞாபகப்படுத்துவது
6) விஜய் நடித்த படங்களில் ஒன்று
12) போர் நடக்க இது அவசியம்
13) சென்னை விமான நிலைய மேற்கூரை அடிக்கடி ________ ஏற்படுவது உண்டு
14) அல்லி என்பதன் வேறு பெயர்
15) தாய்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ராப் பாடகர்
19) கோந்து வேறு சொல்
21) வெளியில் இருந்து கதவை தட்டுபவரை வீட்டின் உள் இருப்பவர்
இவ்வாறு கேட்பர்
23) இதன் அடிப்படையில் சலுகைகள் மக்களுக்கு கிடைக்கிறது
24) பண்டைய தமிழர்களின் தலையாய தொழில்
மேலிருந்து கீழ்
2) இராமாயணத்தில் வரும் ஒரு வயதான பெண் துறவி
3) 1980ல் புகழ்பெற்ற நடிகை
4) இதன் அழகு முகத்தில் தெரியுமாம்
8) நீண்ட தலைமுடிக்காக பெண்கள் பயன்படுத்துவது
10) ஒரு வகை பூ
11) 2.3 கி.மீ நீளம் உள்ள இந்தியாவின் முதல் கடல் பாலம்
18) ___________ படங்கள் வெள்ளி கிழமைகளில் அதிக அளவில் வெளியிடப்படுகிறது
20)கலவரம் வேறு சொல்
22) பழைய மற்றும் புதிய என இரு ஏற்பாடுகளை உடைய புனித நூல்
கீழிருந்து மேல்
7) கயவர்களை இப்படியும் சொல்வதுண்டு
16) அஸ்தி
17) தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக எளிதில் ______
அடைவதுண்டு
24) ________ முதல் பாதம் வரை என்று சொல்வார்கள்
25) மனுநீதி சோழனிடம் பசு இதை எதிர்பார்த்தது
27) அரைக்கப்பட்ட தானியம்
வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342
குறுக்கெழுத்துப் புதிர் - 9 க்கான விடை
முந்தையது – குறுக்கெழுத்துப் புதிர் – 9
மறுமொழி இடவும்