குறுக்கெழுத்துப் புதிர் – 4

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும். குறுக்கெழுத்துப் புதிர் ‍- 3 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடமிருந்து வலம்

3) ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு

7) மாயம் என்பதன் வேறு சொல்

8) குற்றாலீஸ்வரன் எந்தத் துறையில் சாதனை செய்தார்

12) உலக நாயகன்

14) காகிதம் செய்ய இது தேவை

16) சதுரங்க விளையாட்டில் தொடர்புடைய சொல் இது

19) அரசியல் கட்சிகள் சார்ந்திருப்பது

20) இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் இடம்

வலமிருந்து இடம்

5) சாவு என்பதை இப்படியும் சிலர் சொல்வார்கள்

6) ‘லலிதா’ என்ற பெயரை செல்லமாக இப்படியும் அழைப்பார்கள்

10) இவை மொத்தம் 12

13) பொறுமை வேறு சொல்

15) செழுமை என்பதன் பொருள்

18) முருகன் சூரனை இது செய்தார்

மேலிருந்து கீழ்

1) கோவூர் கிழார் சமரசம் செய்து வைத்த இரு சோழ அரசர்களில் ஒருவர்

2) போதை

4) பெருமாள் வேறு பெயர்

5) சென்னையின் ஒரு பகுதி

9) சிங்கநடை போட்டு ________த்தில் ஏறு

11) ________ தேநிலா ஆடுதே பாடுதே (திரை இசை பாடல்)

14) நகரத்தில்தான் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள்

கீழிருந்து மேல்

8) ஊட்டி வேறு பெயர்

15) ஜெயம் ரவி நடித்த படம் இது. ________ மகன்

17) சிம்பு நடித்த படம்

19) திருவனந்தபுரத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரை பகுதி

21) நூறு

22) தாய்லாந்து நாட்டின் க‌ரன்சி இப்படி அழைக்கப்படுகிற்து

23) தழும்பு வேறு சொல்

வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 3 க்கான விடை

குறுக்கெழுத்துப் புதிர்- 3 - விடை
குறுக்கெழுத்துப் புதிர்- 3 – விடை

முந்தையது – குறுக்கெழுத்துப் புதிர் – 3

அடுத்தது – குறுக்கெழுத்துப் புதிர் – 5

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.