குறுக்கெழுத்துப் புதிர் – 7

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 6 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடமிருந்து வலம்

1)ரஷ்ய புரட்சியை தலைமை ஏற்று நடத்தியவரின் முழுப்பெயர்

3) திரைப்படத்தில் இதுதான் அவசியம்

6) கவிதை – சுருக்கமாக இப்படியும் அழைக்கலாம்

9) பந்தியில் இதனைப் பயன்படுத்துவார்கள்

13) காணிக்கை வேறு சொல்

15) பருப்பு என்பதை குழந்தைகள் இப்படித்தான் சொல்வார்கள்

19) திகில் படங்களை பார்க்கும் போது நம் மனது இப்படித்தான் இருக்கும்

21) விஜயகாந்த் நடித்த படம்

24) வயது என்பதை இப்படியும் சொல்லலாம்

வலமிருந்து இடம்

8) சுவர் வேறு சொல்

10) காதலர் தினம் திரைப்படத்தின் இயக்குனர்

12) தொடர்ச்சியாக ஒரு பத்திரிக்கையைப் படிப்பவன்

17) குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது _______________ உள்ளன‌

20) அகன்ற வாயை உடைய, உயரக் குறைவான மண் பாத்திரம்

மேலிருந்து கீழ்

1) ரம்யா பாண்டியன் நடித்த தமிழ் படம்

2) விரைவில் துரு பிடிக்காத உலோகங்களில் ஒன்று

4) திருமணம் வேறு சொல்

7) இதை மதியால் வென்று விடலாம்

10) ஒரு வகை சுவை

12) முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர்

20) ஆம் என்பதன் வேறு சொல்

கீழிருந்து மேல்

5) பிணம் வேறு சொல்

14) பரமசிவனின் துணைவியார்

16) சந்தோஷ் நாராயணன் இசையமைத்த திரைப்படங்களில் ஒன்று

18) இயற்கை போதைப் பானம்

19) மிஸ்டர் சந்திரமெளலி என்ற தமிழ் படத்தின் இயக்குனர்

21) ஆசை என்று பொருள்படும் வேறு சொல்

22) உருட்டுக்கட்டை வேறு சொல்

23) கிருஷ்ணன் என்ற பெயரை சுருக்கமாக இப்படி அழைப்பார்கள்

24) இது வந்தால் பத்தும் பறந்து விடுமாம்

வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 6 க்கான விடை

குறுக்கெழுத்துப் புதிர்- ‍ 6- விடை
குறுக்கெழுத்துப் புதிர்- ‍ 6- விடை

முந்தையது – குறுக்கெழுத்துப் புதிர் – 6

அடுத்தது – குறுக்கெழுத்துப் புதிர் – 8

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.