குறுங்கவிதைகள் – குரு பிரசாந்

மாமழை

அறுந்து போகும் மழைத் துளிகளை
மீண்டும் கோர்த்து நெய்கின்றன
மேகங்கள்

அன்றில் பகிர்ந்து கொள்கிற அன்பை
இன்றும் வெட்ட வெளிகளில் தேடுகிறது
குயில்

இரவில் பூத்த வெள்ளைப் பூவை
இரசிக்கிறது ஊமை நிலவு .
ஒருதலைக் காதல்

ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com