குறைத்திட முயற்சிப்போம்
நம் குறைகளை
திருத்திட முயற்சிப்போம்
பிறர் குறைகளை
தேடிப் பிடிப்பதை
குறையில்லாத
மனிதரில்லையே
மாறிவிடும் உலகிலே
குறைகளை நிறைகளாய்
மாற்றுவோமே
தன்னை நல்லவனாய்க்
காட்டிட விரும்பியே
பிறர் குறைகளை வெளிப்படுத்துவது
நல்ல மனிதரின்
பழக்கம் இல்லையே
நல்லறம் கொண்டு
நல்லபடியாக வாழ்வோமே
நடப்பதும் நன்மையாய்
நடந்திடுமே
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கைபேசி: 9500421246
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!