சாரலிலே நனையலாமா – பறவைகளின்
சங்கீதம் கேட்கலாமா?
தூரலிலே நனைந்து – தலை
துவட்டாமல் திரியலாமா?
தீராத நோய் தீர்க்கும் – பொதிகைமலை
தேனருவி கொட்டலாமா?
சீராக பாய்ந்து வரும் – செண்பக
அருவி தேடி போகலாமா?
நேராக தாண்டி நம்மை – நடக்கும்
குரங்குகளை ரசிக்கலாமா?
ஏறாத மலையிலேறி – தென்றல்
மேனி தவழலாமா?
ஓராயிரம் மனக்கவலை – நமக்கென்றே
இருந்தாலும் போக்கிடவே
ஆரவாரம் செஞ்சு பாயும்
ஐந்தருவி தேடலாமா?
கைபேசி: 9865802942