குல்லானா குல்லானா பாட்டு ஒரு புத்திசாலி தொப்பி வியாபாரியின் கதை ஆகும். இது ராகத்தோடு பாடக்கூடிய ஒரு சிறுவர் பாட்டு.
குல்லானா குல்லானா
பலே பலே குல்லானா
ஜோரான குல்லானா
ஜொலிஜொலிக்கும் குல்லானா
காலிரண்டும் சோரவே
கண்ணிரண்டும் சுற்றவே
களைப்படைந்த வியாபாரி
மரத்தடியில் தூங்கினான்
மரத்தில் இருந்த குரங்குகள்
மளமள என இறங்கின
எடுத்துக் கொண்டன குல்லாவை
மாட்டிக் கொண்டன குல்லாவை
விழித்துப் பார்த்தான் வியாபாரி
கேட்டுப் பார்த்தான் குல்லாவை
தர மறுத்தன குல்லாவை
தந்திரம் செய்தான் வியாபாரி
குல்லாக்காரன் குல்லாவை
வீசி எறிந்தான் தரையிலே
பார்த்திருந்த குரங்குகள்
தானும் வீசி எறிந்தன
குல்லாக்காரன் குல்லாவை
சேர்த்து மூட்டை கட்டினான்
சலாம் ஒன்று போட்டானாம்
சந்தோசமாய் போனானாம்.