இருளடைந்த இருட்டின் ஊடே
நிசப்தமாய் தினம் தினம் காலைப்பயணம்
மனம் மட்டும்
தீஜுவாலையாய் உற்சாகக் குளியல்
குளிர் காற்றின் கொடுமை கூடத் தென்றலாய்
பரபரப்பு மனதில் பாதியாய் படர்ந்து அழுத்தும்
இரத்தத்தின் உயிரணுக்கள்
அனைத்தும் உற்சாகமாய் உயிரூட்டும்
காலைப் பதற்றம் கவின் மேகமாய் கவிழ்ந்து கொள்ள
இளம் சூரிய வெளிச்சத்தின் ஊடே
ஒளிக் கீற்றாய் ஒரு பயணம்.
ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் இல்லை.
இதற்கு இப்படி என்ற பதில்கள் இல்லை.
மனது மட்டும் சமாதானமாய்
மகிழ்வுடனே மனதின் பயணம்
இயந்திர இதயங்கள்
சில பொழுதில்
கருணையைக் கசியவிடும்
காக்கைகள் துரத்தும் பருந்தாய்
அமைதியாகப் பறந்து
தற்பெருமை பேசாமல்
ஆகாய உயரத்தில் ராஜபருந்தாய்
விஸ்வரூபமெடுக்கும்
அந்தக்
குளிருக்குள் விசித்திரப் பயணம்
முனைவர் ம. அபிராமி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!