குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பகுதி 5

பள்ளி மாணவர்களின் அன்றாட செயல்பாடுகள்

காலை 7.௦௦ மணி முதல் – 8.௦௦ மணி வரை – சுய தேவைகள்

காலை 8.௦௦ மணி முதல் – 8.3௦ மணி வரை – பள்ளி வழிபாட்டுக் கூட்டம்

காலை 8.3௦ மணி முதல் – 11.15 மணி வரை – பள்ளி பாடங்கள்

காலை 11.15 மணி முதல் – 11.30 மணி வரை – இடைவேளை

காலை 11.30 மணி முதல் – 12.30 மணி வரை – பள்ளி பாடங்கள்

மதியம் 12.30 மணி முதல் – 1.30 மணி வரை – உணவு இடைவேளை

மதியம் 1.30 மணி முதல் – 4.30 மணி வரை – பள்ளி பாடங்கள்

மாலை 4.30 மணி முதல் – 5.30 மணி வரை – வீட்டிற்கு திரும்புதல்

மாலை 5.30 மணி முதல் – 9.00 மணி வரை – டியூசன்

இரவு 9.00 மணி முதல் – 10.00 மணி வரை – இரவு உணவு

இரவு 10.00 மணி முதல் – 7.00 மணி வரை – தூக்கம்

மேற்காணும் செயல்பாடுகளில் குழந்தைகளின் மனோநிலை

காலை 7.௦௦ மணி முதல் – 8.௦௦ மணி வரை – சுய தேவைகள் – நிர்பந்தம்

காலை 8.௦௦ மணி முதல் – 8.3௦ மணி வரை – பள்ளி வழிபாட்டுக்கூட்டம் – நிர்பந்தம்

காலை 8.3௦ மணி முதல் – 11.15 மணி வரை – பள்ளி பாடங்கள் – விருப்பம் இல்லாத தன்மை

காலை 11.15 மணி முதல் – 11.30 மணி வரை – இடைவேளை – சந்தோசம்

காலை 11.30 மணி முதல் – 12.30 மணி வரை – பள்ளி பாடங்கள் – விருப்பம் இல்லாத தன்மை  

மதியம் 12.30 மணி முதல் – 1.30 மணி வரை – உணவு இடைவேளை – சந்தோசம்

மதியம் 1.30 மணி முதல் – 4.30 மணி வரை – பள்ளி பாடங்கள்

மாலை 4.30 மணி முதல் – 5.30 மணி வரை – வீட்டிற்கு திரும்புதல் – சந்தோசம்

மாலை 5.30 மணி முதல் – 9.00 மணி வரை – டியூசன் – விருப்பம் இல்லாத தன்மை

இரவு 9.00 மணி முதல் – 10.00 மணி வரை – இரவு உணவு – குறைவான சந்தோசம்

இரவு 10.00 மணி முதல் – 7.00 மணி வரை – தூக்கம்

மேற்காணும் செயல்பாடுகளில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இடைவேளை, உணவு இடைவேளை மற்றும் வீட்டிற்கு திரும்பும் போதுதான்.

சில நேரங்களில் மகிழ்ச்சியும் சில நேரங்களில் விருப்பமில்லாத தன்மையும் ஏன் மாறி மாறி வருகின்றன?

2014 ஆம் ஆண்டு சென்னை மௌலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள். அல்லது உங்களுக்கு தெரிந்த பெரிய கட்டிடங்கள் ஏதேனும் சரிந்து விழுந்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மௌலிவாக்கம் கட்டிடம் இடிந்தபோது, அது ஏன் விழுந்தது என்பதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று: அதன் அஸ்திவாரம் சரியில்லை என்பதுதான்.

அஸ்திவாரம் சரியில்லாதது எல்லாம் விழுந்து விடும் என்றால், அது குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் தானே?

குழந்தைகளுக்கான அஸ்திவாரம் என்பது பெற்றோர்கள் தான்.

வீட்டு ஏக்கம், ஊக்கமின்மை, தூக்கமின்மை, மனச்சோர்வு, தள்ளிப்போடுதல், கல்வி அழுத்தம், கொடுமைப்படுத்துதல் (ராகிங்), கொடுமைப்படுத்துபவர்களை எதிர்கொள்வது, ஆசிரியர்களை மதிக்கவில்லை, பள்ளி பரீட்சைகள், பள்ளிக்கு கட்டணம், அசைன்மெட், கூடுதல் வகுப்புகள் (SPECIAL CLASS) வீட்டுப்பாடம், பிறருடன் ஒப்பீடு, சுயமரியாதை (SELF ESTEEM) போன்ற பலவிதமான பிரச்சினைகளுக்குள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் மாணவர்கள்.

இந்த இக்கட்டான சூழலில் குழந்தைக்கு தேவைப்படுவது என்ன தெரியுமா?

அன்பான ஆறுதலான சில வார்த்தைகள்.

‘உனது கவலையில் பங்கெடுக்க நான் இருக்கிறேன்’ என்ற உணர்வை குழந்தைகளுக்குள் ஏற்படுத்துவதுதான்.

ஏரியா விட்டு ஏரியா சென்று, ஊரு விட்டு ஊரு சென்று, நாடு விட்டு நாடு சென்று பணம் சம்பாதிப்பது எல்லாம் குழந்தைகளுக்கு என்றால்…

எப்பொழுதும் வேலை வேலை வேலை என்றால்…

எப்பொழுதும் பிரச்சனை பிரச்சனை என்றால்…

பணம், பதவி, பங்களா என அனைத்தும் இருந்தும் என்ன பயன்? என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்

ஒரு குழந்தை ஏதேனும் மேடைகளில் பரிசு வாங்கும் போதோ அல்லது பேசுகின்ற போது ஆயிரம் பேர் அமர்ந்திருந்தாலும் அந்த குழந்தை முதன்முதலாக தேடுவது தனது தாய் அல்லது தந்தையை தான்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பள்ளிக்கூடங்களில் அட்டெண்ட்ஸ், (ATTENDANCE), ரெகுலாரிட்டி (REGULARITY) என நிறைய பரிசுகள் வாங்கி இருப்பார்கள்.

ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வகுப்புகள் வரும்போது பரிசுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். அதுதான் எதார்த்தம்.

ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கிடைத்த பரிசுகளின் எண்ணிக்கை ஆறாம் வகுப்பு மேல் வரும் பொழுது குறைய ஆரம்பித்து விடும்.

இங்கே பரிசு என்பது ஒரு பொருள் என்பது பொருளல்ல. அவனுடைய திறமையை வெளிப்படுத்தி அதை அங்கீகாரத்திற்கான அடையாளமாக பார்க்க வேண்டும்.

அவனுடைய திறமை ஏன் குறைகிறது என்பதற்கான பதிலை எங்கே நாம் போய் தேடுவது?

சுமார் 5 மணி நேரம் மட்டும் மாணவர்களோடு தொடர்பில் இருக்கும் ஒருவரால், இவ்வளவு மாற்றத்தை மாணவர்களுக்குள் ஏற்படுத்த முடியும் எனும்போது, தொடர்ந்து உறவிலேயே இருக்கும் பெற்றோர்களால், ஏன் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி?

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408

Comments

“குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பகுதி 5” மீது ஒரு மறுமொழி

  1. […] குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பகுதி 5 […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.