குழலினிது யாழினிது செவிக்கு இன்பம்
குழலூதும் யாதவனே தெவிட்டா அமுதம்
மலர் சொறியும் பூ மணக்கும் நாறும் எங்கும்
மலராத மனமுயின்று நாளும் ஏங்கும்
அழல்தணிய துயரகல கண்ணன் நாமம்
அலற்றுவதால் இருவினையும் தன்னால் மாளும்
தாமதமேன் கண்குளிர காண்போம் இன்றே
தாமோத ரன்தாளில் இணைவோம் ஒன்றே.!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com