தன்னுள் இருப்பதைத் தானே உணராத போது
வெற்றி தோல்வியின் குழப்பத்தில்
திட்டவட்ட அறிவிப்புகளைத் தீட்டாது
திணறுகிறது மனத்தூரிகை
நிமிர்ந்து பார்க்கும் உயரங்களில்
யார் கொடி பறக்கவும்
யாவருக்கும் இல்லை
யாதொரு தடையும்
பார்க்க முடியாமல் போவதால்
இல்லாமல் போய்விடவில்லை
முதுகும் மூளையும்
உள்ளிருந்து குதித்து வெற்றி வாகை
சூடிக் கொள்கிறது திறமை
இருந்தும் ஒரு புல்லாங்குழலை
இன்னும் தேடிக் கொண்டே
இருக்கிறது அந்த மூங்கில் காடு
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
கவிதை எங்கோ அழைத்துச் சென்று விடுகிறது!