குழு விளையாட்டுகளின் வகைகள்

குழு விளையாட்டுகளின் வகைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

அர்த்தம் உள்ள விளையாட்டுக்கள் அனைத்தும், அதனதன் தன்மைகளால், ஆடும் மக்களின் ரசனைக் கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது.

கீழ்க் காணும் பட்டியல் விளையாட்டுகள் தோன்றிய அர்த்தத்தை மேன்மைப் படுத்தியிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

குழு விளையாட்டுகளின் வகைகள் மற்றும் ஒவ்வொரு வகையின் கீழ் அமையும் விளையாட்டுகளும் தரப்பட்டிருக்கின்றன.

 

1. பெரும் ஆடுகள விளையாட்டுக்கள் (Field Games)

கிரிக்கெட்கிரிக்கெட்

உதாரணம் : கால்பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கிரிக்கெட், தளப் பந்தாட்டம், மென் பந்தாட்டம், போலோ கர்லிங் முதலியன.

2. சிறு ஆடுகள விளையாட்டுக்கள் (Court Games)

கூடைப்பந்தாட்டம்கூடைப்பந்தாட்டம்

உதாரணம் கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம், வளையப் பந்தாட்டம். டென்னிஸ், கபடி முதலியன.

3. பனித்தரை விளையாட்டுக்கள் (Rink Games)

பனி வளைகோல் பந்தாட்டம்பனி வளைகோல் பந்தாட்டம்

உதாரணம் பனி வளைகோல் பந்தாட்டம், காலுருளையுடன் வளைகோல் பந்தாட்டம், கர்லிங் போன்றவைகள்.

4. நெடுந்தூர இலக்கு விளையாட்டுக்கள் (Course Games)

கோல்ப்
கோல்ப்

உதாரணம் தரைக் குழிப் பந்தாட்டம் (Golf), கிராகட் (Croquet)

5. நீச்சல்குள விளையாட்டுக்கள் (Water Games)

தண்ணீர் போலோதண்ணீர் போலோ

உதாரணம் தண்ணீர் போலோ, ஆக்டொபுஷ் போன்றவை.

6. குறிபார்த்து எய்யும் விளையாட்டுக்கள் (Target Games)

பந்து உருட்டல்பந்து உருட்டல்

உதாரணம் பந்துருட்டல் (Bowling), கனத்தட்டு எறிதல், கோலிக்குண்டு ஆடுதல் போன்றவை

7. மேசை மீதாடும் விளையாட்டுக்கள் (Table Games)

மேசைப் பந்தாட்டம்மேசைப் பந்தாட்டம்

உதாரணம் மேசைப் பந்தாட்டம், மேசைக் குழிப் பந்தாட்டம், (Billards) கேரம், ஸ்நூக்கர் போன்றவை.

8. அட்டை மீதாடும் விளையாட்டுக்கள் (Board Games)

சதுரங்கம்சதுரங்கம்

உதாரணம் சதுரங்கம், டிராப்ட் போன்ற ஆட்டங்கள்.

9. சீட்டு விளையாட்டுக்கள் (Card Games)

சீட்டாட்டம்
சீட்டாட்டம்

உதாரணம் பிரிட்ஜ், போக்கர், ரம்பி, ஃபரோ, ஸ்கேட் கனஸ்டி முதலியன.

10. சூதாட்டங்கள் (Dice Games)

பாம்புக் கட்டம்பாம்புக் கட்டம்

உதாரணம் கிராப்ஸ், பெல் அண்ட் ஹேமர், கிரௌன் அண்ட் ஆங்கர், ஹஸார்டு முதலியன.

11. தெரு விளையாட்டுக்கள் (Street Games)

உதாரணம் தொட்டு விளையாடும் ஆட்டங்கள் (Tag), நொண்டி ஆட்டங்கள், உருளைக்கிழங்கு பொறுக்குதல் முதலியன.

12. விருந்து நேர விளையாட்டுக்கள் (Party Games)

இசை நாற்காலி
இசை நாற்காலி

உதாரணம்  கண்ணாமூச்சி ஆட்டம், கண்டுபிடி ஆட்டம், இசை நாற்காலி போன்றன.

பலர்கூடி போராடி இயங்குகிற குழு விளையாட்டுகளின் வகைகள்  பன்னிரெண்டாக உள்ளன.

அது போலவே, தனிமனிதருக்கான திறமை வளர்க்கும் போட்டிகளாகப் பன்னிரெண்டு வகைகளாக உள்ளன. அத்தனையும் தனி ஒருவருக்குத் தருகின்ற சிறப்பு வாய்ப்புக்களாகும்.

அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

எஸ்.நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.