கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

“உங்களை விட்டுவிட்டு நான் தனிமையில் இருக்கப் போகிறேன்”… அதிதீத கோபத்துடன் வரும் திருவிளையாடல் திரைப்பட வசனம்…

“தனியா அழுதுகிட்டு இருக்கா…” என்ற நம் சக உறவுகளைப்பற்றிய உரையாடல்.

தனிமை என்றால் சோகம், விரக்தி, அழுகை என்ற உணர்ச்சிகளே பதிவாக உணரப்படுகிறது….

அடர் வனத்தில் தவமியற்றும் ஞானிகள்

அன்பான துணையின் நினைவில் காதலர்கள்

அழகான கவிதை தரும் கவிக்குயில்கள்

இவர்களெலாம் தனிமையிலே இனிமை காண….

வாழ்க்கை ஆற்றை கடந்து விட்ட மூத்தோர்கள்

வறுமையிலே தனித்திருக்கும் வயோதிகர்கள்

வற்றாத நோயின் பிடியில் வாடுகின்ற மானிடர்கள் என

இவர்களெலாம் தனிமையெனும் கொடுமையில் வாட…

நாகரீக வாழ்வினிலே

அடுத்த வீட்டில் இருப்பவரை அறியாத

நகர வாழ்வும் கொடுமையிலும் கொடுமையாக

தொடர்கிறதே…. இது சரியா?

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

பழமொழி கூறுவதை

உணர்தல் நன்மை…

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942