நூலின் இழையில்
நூதன இருப்பிடம்
ஆலின் விழுதாய்
அற்புத சிறப்பிடம்
கன்னியின் கார்குழல்
பின்னலாய் கூடு
அன்னியன் அண்டாத
கண்ணிய வீடு
மானுடன் கல்லா
கலையின் இரகசியம்
வானுடன் செல்லும்
சிட்டின் அதிசயம்
கிளையின் நுனியில்
வலையின் பின்னல்
அலையும் காற்றில்
நிலையாய் நிற்கும்
இரண்டோ மூன்றோ
அடுக்கு கீழே
தரைத்தளம் மட்டும்
தலைக்கு மேலே
அந்தியும் சிவந்தால்
அடைக்கல மங்கே
விந்தையும் நிகழும்
வினோத மிங்கே
இதுபோல் இல்லம்
இங்கேது மில்லை
இதயமும் கவரும்
சந்தேக மில்லை
பறக்கும் சிட்டும்
உறக்கம் கொள்ளும்
பதற்றம் இல்லா புதுமை
கூடு
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!