அரசமரம் ஒன்ன வச்சு
அதனடியில் என்னை வச்சு
அமைதியாக வணங்கி வந்த காட்சி மெல்ல மாறுது
அஞ்சாறு நாளுமட்டும் இந்தகதை தொடருது
மேளஓசை அதிருது மின்னல் ஒளி பெருகுது
ஆராவார சத்தத்தோட பூசை நடக்குது
வானம் அதிர வெடியின்ஓசை முழங்குது
வண்ண வண்ண சாயத்தோட என்தேகம் ஜொலிக்குது (அரச மரம்)
அருகம்புல்லு முளைச்ச இடம் அடுக்குமாடி ஆனது
எருதுபசு கூட்டமெல்லாம் அரிதாகிப் போனது
மிருககுணம் மனிதரிலே நெறஞ்சி போனது
மிச்சமுள்ள சிலரும் ஒதுங்கும் நிலை வந்தது (அரச மரம்)
கணபதியாம் என்னை செய்ய எடுத்த பொருளு கெமிக்கலு
கண்டபடி வண்ணம் தீட்ட பெயிண்ட் கெமிக்கலு
அடப்பாவி மனிதாநீ பூமியை ஏன் கெடுக்கிற
அதுக்கு துணையாய் என்பெயரை எதுக்காக கேக்குற (அரச மரம்)
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!