பிரியமானவரின் விரல்கள்
தலைகோதி விடுவதாய்
ஆசையாய் வாங்க நினைத்த
புத்தகம் ஒன்று கையில் கிடைத்திருப்பதாய்
ஈரக்காற்றோடு சேர்ந்து வரும்
இசைக் கோர்வையைக்
காதுகள் மெல்ல ஸ்பரிசிப்பதாய்
அம்மாவிற்கு வாங்க நினைத்திருந்த
சேலையைக் கடையில் புரட்டிப் பார்ப்பதாய்
என்ன நிகழ்ந்திருக்கும் இந்தப்
பொழுதுகளில்!
காத்தாடியைப் பறக்க விடும்போது
ஆகாயத்தையும் கையில் பிடித்திருக்கும்
மகிழ்ச்சியை அனுபவித்ததில்லையா?
இறுக்கம் தளர்ந்து கொஞ்சம்
பகல் கனவும் காணுங்கள்!
ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!