சொர்க்கமே என்றாலும் அது நம்ம
ஊர போல வருமா என்பது
பாடல் வரிகள் அல்ல
கொரானாவால் நாம் உணர்ந்த
வாழ்க்கை வலிகள்
மனம் வலிகளை மறக்க
உறவுகள் உடன் இருப்பதே மருந்து
இயந்திர வாழ்வில் இழந்த
சின்ன சின்ன சந்தோசங்களை
கண்டு பிடித்தோம் மீண்டும்
நாடகங்கள் இல்லாமல்
நாட்டு நடப்புகள்
பற்றிய சிந்தனை கொண்டோம்
புன்னகைக்கக் கூட நேரம் இல்லாது
நடந்து கொண்ட நாம் பிறர்
நலம் விசாரிக்க தவறவில்லை
சாம்பார் பாட்டே சங்கீதமானது
சான்றோர் வாக்கே தெய்வீகமானது
புதியன கழிதலும் பழையன புகுதலும் உசிதமானது
பல வீடுகளில் செடிகொடிகளும் பூச்செடிகளும்
பூத்துக் குலுங்கிச் சிரிக்க
இயற்கை காதலர்கள் இந்த பூமியில் அதிகமோ
என்று எண்ணத் தோன்றுகிறது
மாதம் மும்மாரி பொழிந்தது
என படித்துதான் தெரிந்தோம்
இன்றுதான் நேரில் பார்த்து அறிந்தோம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!