மனிதன் தாவரங்களை உண்டால் சைவம்; விலங்குகளை உண்டால் அசைவம்; தாவரம் பூச்சிகளைக் கொன்று உண்டால் கொலைகாரத் தாவரம்.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தனது உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. இருப்பினும் சில வகைத் தாவரங்கள் ‘அசைவமாக’ அதாவது சிறு சிறு பூச்சிகளைக் கொன்று தன் தேவையின் ஒருபகுதியைப் பெற்றுக் கொள்கின்றன. அதாவது அவை பூச்சியுண்ணும் தாவரங்கள்.
எண்ணற்ற தாவரங்கள் இவ்வகை வாழ்வினை மேற்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக நெப்பந்தஸ், பரோசீரா, சாரசீனியா எனப் பல தாவரங்கள் உள்ளன. இவை அனைத்தும் பூச்சிகளைப் பிடிக்கும் முறையில் வேறுபாடுகள் உள்ளன.
நெப்பந்தஸ் என்னும் தாவரம் குடுவை அமைப்பு மற்றும் கவர்ச்சியான நிறம் கொண்டுள்ளது. நிறத்தினால் ஈர்க்கப்பட்டு பூச்சிகள் குடுவையில் சுரக்கப்பட்ட நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றன. பின் தாவர ஜீரண நீரால் செரிக்கப்படுகின்றன. தாவரங்களில் கொலைகாரத் தாவரங்களும் உள்ளன.
Very useful