கோடைவெயிலே!
கோடைவெயிலே!
கொளுத்தும் வெயிலே!
மாலை வந்தால்
மயக்கும் மஞ்சள் வெயிலே!
சிந்தை நடுங்கும்
சித்திரை வெயிலே!
கண்கள் கூசும்
கத்திரி வெயிலே!
நீ சற்றுக் களைப்புற்றால்
வாயுபகவான் சாமரம்
வீசட்டுமே!
ஆடாத மரங்களெல்லாம்
ஆடிக்களிக்கட்டுமே!
நீ சற்று ஓய்வெடுத்தால்
வருணபகவான் மழை
பொழியட்டுமே!
தாகம் தீர்க்கும் தடாகங்கள்
தண்ணீரால் நிரம்பட்டுமே!
புவிவெப்பமயமாதல் குறைந்து
பூமி குளிரட்டுமே!