சுவையான கோதுமை பிஸ்கட்

கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?

கோதுமை பிஸ்கட் மாலை நேரத்தில் தேநீருடன் உண்ண சிறந்த சிற்றுண்டி உணவு ஆகும். இதனுடைய சுவையும், மணமும் எல்லோரையும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ண வைக்கும்.

குழந்தைகளுக்கு சத்தான இந்த கோதுமை பிஸ்கட்டை செய்து, பள்ளிக்கும் சிற்றுண்டி உணவாகக் கொடுத்து விடலாம்.

மழைக்காலத்தில் உண்ண இப்பிஸ்கட் மிகவும் ஏற்றது. இனி சுவையான இதன் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 400 கிராம் (2 பங்கு)

சீனி – 150 கிராம் (¾ பங்கு)

வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன் அளவு

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

கோதுமை பிஸ்கட் செய்முறை

சீனியை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.

 

அடித்து வைக்கப்பட்ட சீனி
அடித்து வைக்கப்பட்ட சீனி

 

வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அடித்த சீனி, வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

 

பிஸ்கட் செய்யத் தேவையான பொருட்கள் தயார் நிலையில்
பிஸ்கட் செய்யத் தேவையான பொருட்கள் தயார் நிலையில்

 

மூன்றினையும் ஒரு சேர நன்கு கலந்து கொள்ளவும்.

 

ஒருசேர கலக்கப்பட்ட மூலப்பொருட்கள்
ஒருசேர கலக்கப்பட்ட மூலப்பொருட்கள்

 

பின்னர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.

 

திரட்டப்பட்ட மாவு
திரட்டப்பட்ட மாவு

 

எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சுமார் ½ இன்ஞ் தடிமன் உள்ள சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.

 

சப்பாத்தியாகத் தேய்த்ததும்
சப்பாத்தியாகத் தேய்த்ததும்

 

பின்னர் சப்பாத்தியை தேவையான அளவு மற்றும் வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

 

துண்டுகளாக்கப்பட்ட மாவு
துண்டுகளாக்கப்பட்ட மாவு

 

பிஸ்கட்டுகளாக்கப்பட்ட மாவு
பிஸ்கட்டுகளாக்கப்பட்ட மாவு

 

இவ்வாறு எல்லா மாவினையும் விரும்பும் வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் துண்டுகளாக்கிய மாவினைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

 

பிஸ்கட்டுகளை எண்ணெயில் போடும் போது
பிஸ்கட்டுகளை எண்ணெயில் போடும் போது

 

பிஸ்கட்டுகள் வேகும் போது
பிஸ்கட்டுகள் வேகும் போது

 

சுவையான கோதுமை பிஸ்கட் தயார்.

சுவையான கோதுமை பிஸ்கட்
சுவையான கோதுமை பிஸ்கட்

 

ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்தவும்.

குறிப்பு

சீனி சேர்த்து உள்ளதால் மாவு நெகிழும்; எனவே தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசையவும்.

மாவினை சப்பாத்தியாகத் திரட்டும் போது, கோதுமை மாவினை பயன்படுத்தவும். அப்போதுதான் துண்டுகளாக்கும்போது எளிதாக இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் சீனிக்கு பதில் கருப்பட்டி சேர்த்து, பிஸ்கட் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் ஏலக்காய் பொடி சேர்த்து பிஸ்கட் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.