கும்மியடி பெண்ணே கும்மியடி
நம் கோதையின் பெயரைச் சொல்லியடி
குங்குமம் அப்பியே மங்கல வீதியில்
சென்றவள் நம்மவளைக் கண்டுபிடி
தைத்திங்கள் அன்று பார்த்திருந்தாள்
தையலாள் மணம் கொள்ளக் காத்திருந்தாள்…
பைய நடந்தவள் மாயனுக்கே
பைங்கிளி மாலையை சாற்றி நின்றாளே
கோதையின் பாதத்தை நன்குபிடி
பாவங்கள் தீருமே வேண்டியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
நம் கோதையின் பெயரைச் சொல்லியடி!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!