நெருப்புக் கோழி கோபாலன்
நின்றான் ஏரிக்கரை மேலே
வருத்திய தாகம் தீர்ப்பதற்கு
வாயினை நுழைத்தான் நீர் மீது
விருட்டென முத்தன் முதலையவன்
வேங்கை போலவே சீறிவந்தான்
உருண்ட விழிகளால் கோழியதை
உண்டிட ஆசையில் அங்கு நின்றான்
பருத்த உடலைக் கொண்டவனே
பாய்வதில் நீயும் வல்லவனே
பெருத்த உடல் எனக்குமுண்டு
பாய்ந்து செல்லவும் வலிமையுண்டு
உருவத்தால் நமக்குள் வேற்றுமையே
உணவால் இருக்குது ஒற்றுமையே
கருத்த கற்களை உண்பதிலே
கைகோர்த்து நிற்போம் இருவருமே என்றான் முத்தன்
விறுவிறுவென்று நகர்வதிலே
வீறுகொண்டு எழுவதிலே
கறுத்த முதலை உனைப்போலே
விருப்பமுண்டு எனக்கும் தான்
வெற்றி பெறுவதில் இருவரும் ஒன்றேதான்
வீரத்தால் நாம் உறவினர் தான்
நிறுத்தி அங்கே கோபாலன்
நெருப்புக் கோழி சொன்னது கேட்டு
விருட்டென முத்தன் புதைந்தானே
வேகமாய் நீரில் மறைந்தானே
கைபேசி: 9865802942