வேலைதேடிச் சென்ற இடம் பாலையல்ல நண்பனே
மூளைதன்னில் கற்பனைகள் ஊறும் என்பது உண்மையே
காலைப்பொழுது மட்டும் தினம் வேலை உண்டு என்பதால்
மாலை முழுதும் கவிசரத்தை தொடுத்திடத்தான் இயலுமே
சாலையோர மரங்களுடன் சரிசமமாய் பழகலாம்
சோலை நெசவு நடப்பதினால் நூலின் துணி தேடலாம்
சூலைக்குள்ளே ஒரு கவிதை தொகுப்பும் கூட கொடுக்கலாம்
சோலை மலர் கூட சேர்ந்த சிரித்து நாளும் மகிழலாம்
வாழை மரம் போல பிறர் வாழ நாடும் உதவலாம்
கூழை குடித்து ரசித்திடவே குடிசை நோக்கி நடக்கலாம்
ஏழை என்ற போதும் தினம் இனிக்க கவிதை பாடலாம்
கோழையல்ல நண்பனே நம் வீரம் தமிழில் காட்டலாம்
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!