கோவிட்டு பிள்ளையாரு
கொண்டாட போறதாரு?
வாய்விட்டு பாட்டுப்பாட
வாய்ப்பூட்டு பாரு பாரு!
பூமொட்டு வாசமில்லை
பூமாலைக்கும் வேலையில்லை!
நூறெட்டு தேங்காயோட
உன்னைத்தேட யாருமில்லை!
ஏழெட்டு பேரு சேர்ந்து
இப்ப கூடக் கூடாதுல்ல!
வாலாட்டும் பெருச்சாளி
வாகனனே என்ன செய்ய?
இக்கட்டில் இந்த பூமி
இப்படியே போகும் வரை…
வெட்கத்தை விட்டு சொல்லு
வேற எங்க நீயும் போன?
கைபேசி: 9865802942