அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
1.அருந்ததி பட்டாசார்யா
பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாசார்யா உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 25-ஆவது இடத்தில் உள்ளார்.
2.சந்தா கோச்சார்
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 40-ஆவது இடத்தில் உள்ளார்.
3.மஜும்தார் ஷா
பயோகான் மருந்து நிறுவனத் தலைவர் மஜும்தார் ஷா உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 77-ஆவது இடத்தில் உள்ளார்.
4.ஷோபனா பார்தியா
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் நிறுவனத் தலைவர் ஷோபனா பார்தியா உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 93-ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்சிகோ நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி 14-ஆவது இடத்தில் உள்ளார்.