வெட்ட வெளியில வேகாத வெயில்ல
சுட்டெரிக்கும் சூரியனை தொட்டுவிடத்தான் வாயேண்டி
ஒத்தப்பனை மரத்தில உச்சியில் தேனெடுத்து
உட்கார்ந்து சாப்பிடத்தான் என்கூட வாயேண்டி
மத்தளம் பாறையில மஞ்சள் வெயில் காயயில
மத்தாப்பூ சேலைகட்டி மாமங்கிட்ட வாயேண்டி
செத்தநேரம் காத்துவீச சிலிர்த்திடும் வேளையில
அத்தமக உன்னபோல காத்தும்கூட தோணுதடி
குத்தவச்ச பொண்ணபோல ஆவாரை பூத்திருக்க
கொத்து கொத்தாப் பூவெடுக்க கூடநீ வாயேண்டி
அத்தமக உன்னதேடி நானும் வரும் வேளையில
அந்தப்பக்கம் உங்கப்பனுக்கு என்னதான் வேலையடி
சத்தியமா சொல்லுறேன்டீ சாகும்வரை நீதான்டி
உத்தரவை ஊருக்குள்ள வாங்கித்தான் வாரேண்டி
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!