அடர் இருட்டு அப்பிய
அரங்கத்திலும் கூட அச்சம் விடுத்து
ஆலாபனை செய்து காட்டி அசத்திய படியே
விவேக விடியலை விதைத்துக் காட்டுகிறது
விஞ்ஞான விளக்கொன்று பிரகாசமாய்!
முகத்திரையை முழுவதுமாய் நீக்கிய பின்
மதியின் மறுமுகம் பார்த்து
அகத்தினுள் ஆடிடும் ஆனந்தக் கூத்துகளில்
அசையத்தான் செய்கிறது
கணப்பொழுதில் செகமும் கூட…
பெரும் ரகசியமெனும் ரசனைக்கு உண்டானதை
ரகசியமற்றதாக்கி விட
அதிரம்யமாய் நிமிர்ந்து அமர்ந்து
கடை விரித்துக் காட்டும் விடைகளில்
வியப்பாய் விழித்துக் கொள்ளப் போகிறது
மானுட பூமி!
முகம் மட்டுமே பார்த்து பழகிக் கொண்ட
முகங்களுக்குப் பின்னர்
முதுகின் முகவரியும்
முகம் காட்டப் போகிறது இனி
முழுவதுமாய்!
முந்திரி கொட்டையென நீளும்
மூக்குகளின் மேல் தொங்கும்
ஆச்சரியக்குறியாய் ஆகின்றன
ஆள்காட்டி விரல்கள்!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250