கண்ணியம் இழந்த
பொதுநல நோக்கும்
காலாவதியாய்ப் போன
மனிதநேயமும்
இயற்கையை
செலவினமாக்கி
செயற்கையை
வரவினமாக்கி
சுயலாபம் ஒன்றையே
கடிவாளம் இட்ட
மனிதனது முகம்
விழிக்க விரும்பாது
மரித்துப் போக நினைத்தது
சமுத்திரத்தின் கடைசித் துளி!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி