சமையலறை குறிப்புகள் உங்களுக்கு சமையல் செய்யும் போது உதவியாக இருக்கும். தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
சப்பாத்திமாவு பிசையும் போது, அதில் சிறிது பால் சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
வெங்காயத்தை 10 நிமிடம் தண்ணீரில் போட்டு, பின்பு அதை எடுத்து உரித்தால், கண்ணில் கண்ணீர் வராது.
எலுமிச்சம் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு சாறு பிழிந்தால் அதிகப்படியான சாறு கிடைக்கும்.
சூப் செய்யும் போது சிறிது பொட்டுக் கடலையை பொடி செய்து, நீரில் கலந்து சூப் கொதிக்கும் போது கலந்தால் சூப் திக்காக இருக்கும்.
சமையல் எண்ணெயை ஒருமுறை பயன்படுத்திய பிறகு, மீண்டும் அதை சூடு செய்து பயன்படுத்தாதீர்கள். இதனால் செரிமானக் கோளாறு வரவாய்ப்பு உண்டு.
அரிசி / பருப்பு டப்பாக்களில் வேப்பிலை / பிரிஞ்சி இலைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
வெள்ளைப் பூண்டை உரிக்கும் முன்பு, சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு, பின்பு உரித்தால் தோல் எளிதாக உரியும்.
முட்டையை தண்ணீரில் வேக வைக்கும் போது, சிறிது சமையல் எண்ணையை சேர்க்கவும். அவ்வாறு செய்தால் முட்டை ஓடு கீறி முட்டையின் சதைப்பகுதி வெளியே வராது.
குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால், உருளைக் கிழங்கினை இரண்டு மூன்று துண்டுகளாக்கி, குழம்பு கொதிக்கும்போது அல்லது சூடாக இருக்கும்போது சேர்க்கவும். பரிமாறும்போது உருளைக்கிழங்கு துண்டுகளை வெளியே எடுத்து விடவும். குழம்பு சுவையாக இருக்கும்.
சாதம் செய்வதற்கு, அரிசியை முதலில் கழுவ வேண்டும். அதனை 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீரை வடித்து, அதே தண்ணீரைக் கொண்டு சாதம் செய்ய வேண்டும். இதனால் சத்துக்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் சாதம் விரைவில் தயாராகி எரிபொருளும் மிச்சப்படுத்தப்படும்.
ரசம் செய்வதற்கு புளியை ஊற வைக்க மறந்துவிட்டால் கவலை வேண்டாம். தண்ணீரை கொதிக்க வைத்து புளியை ஊற வைத்தால் புளி எளிதில் ஊறிவிடும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, மாவினை ஒன்று போல் திரட்டும் சமயத்தில் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து திரட்டுங்கள். இதனால் மாவு கைகளில் ஒட்டாமல், எளிதாக திரட்ட வரும்.
சமையலறை குறிப்புகள் நீங்கள் சமையல் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி சத்தான, சுவையான உணவுகளைச் செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
பிரேமலதாகாளிதாசன்