உலகையே ஆளும் திறம் பெற்றாலும்
உன்னை விட்டு மீளும் திறம் எமக்கில்லை
பார்த்தவுடன் காதலிக்க துணிவில்லை
உந்தன் காந்தப் பார்வை விட்டகல வழியும் இல்லை
தொட்டவுடன் பற்றிக் கொள்ளும் பரவசம்
நீ தொடாத போதும் பரவும் அந்த மதுரசம்
திட்டிவிட்டால் பட்டுவிடும் கொடிபோலே துவண்டிடுவேன்
கொட்டி விட்டால் தட்டி விட்ட பால் போலே பாழாவேன்
ஆட்டி வைத்தால் ஆடிப் பாவையாவேன்
கொண்டாடி வைத்தால் ஆளும் வர்க்கம் நான் ஆவேன்
திண்டாடும் போதில் உன் கையில் பொருள் ஆவேன்
பெண்ணைக் கொண்டாடி சரித்திரம் காண்பாய்!
போகமாய் புணர்ந்திட மட்டும் எனில் தரித்திரம் காண்பாய்!
சுகன்யா முத்துசாமி