அன்றொரு நாள்
அந்த வசந்த கால நிலவின் ஒளியில்
மெல்லிய தென்றலோடு
நீ அமர்ந்த பொழுதுகளின்
மணம் பரப்பி மலர்ந்த
பூக்கள் அனைத்தும்
உன் புன்னகையை ஒத்திருந்தது……
காலவெளியில்
பழைய இடத்தை தேடிய போது
நில ஒளியும் இருந்தது
அமர்ந்த இடமும் அப்படியே இருந்தது
அந்த பூக்களும் அசல்
உனது
புன்னகையின் சாயலில்
சிரித்தது
ஆனால் நீ அமர்ந்த இடத்தில்
பட்ட மரத்தின் வாடிய
சருகுகள் மட்டுமே மிச்சமாய்
விழுந்திருந்தது
உன் நினைவுகளைப் போல்
-சத்திய பாரதி