எளிமையாக குக்கரில் சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி : ½ கிலோ
பாசிப் பருப்பு : 50கிராம்
முந்திரிப் பருப்பு: 20கிராம்
கிசுமுசுப் பழம்: 20 கிராம்
சுக்கு பொடி: 1டீஸ்பூன்
ஏலக்காய்: 8 பொடி பண்ணியது
தேங்காய் சிறியது : 1
நெய்: 150 கிராம்
கற்கண்டு: ¼ கிலோ
மண்டை வெல்லம்: 600 கிராம்
தண்ணீர்: 1750 மில்லி லிட்டர்
செய்முறை:
முதலில் கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றை தூளாக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் 1750 மில்லி லிட்டர் (சுமார் 3 ½ பங்கு) நீர் விட்டு பச்சரிசி (1 பங்கு), பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதம் ரெடி பண்ண வேண்டும்.
சத்தம் நின்ற பின் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கற்கண்டு, வெல்லத்தை போட்டு கிண்டவும். தனியாக வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி அதில் முந்திரிப் பருப்பு, கிசுமுசு பழம், துருவிய தேங்காயை போட்டு வறுக்க வேண்டும்.
தேங்காய் பொன்னிறமாக வதக்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து இளஞ்சூட்டில் கிண்டி வெல்லம் நன்றாக கரைந்த பின் குக்கரை இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
–பிரபாவதி
Comments are closed.