பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

இந்த தைப்பொங்கலுக்கு பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்து அசத்துங்கள். இதற்கான வழிமுறைகளை எளிதாக விளக்கிக் கூறுகிறேன்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 500 கிராம்

பாசிப் பருப்பு – 50 கிராம்

மண்டை வெல்லம் (சர்க்கரை) – 900 கிராம்

கல்கண்டு – 100 கிராம்

முந்திரிப் பருப்பு – 20 கிராம்

கிசுமுசுப் பழம் – 20 கிராம்

ஏலக்காய் – 8 எண்ணம்

சுக்கு – சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் – 1 எண்ணம் (சிறியது)

நெய் – 150 கிராம்

தண்ணீர் – 6 பங்கு (அரிசி  +பாசிப்பருப்பு)

செய்முறை

முதலில் தேங்காயை உடைத்து திருகிக் கொள்ளவும். சுக்கையும், ஏலக்காயையும் தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். மண்டை வெல்லம், கற்கண்டு இரண்டினையும் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

 

சிறுசிறு துண்டுகளாக்கிய‌ மண்டை வெல்லம், கற்கண்டு
சிறுசிறு துண்டுகளாக்கிய‌ மண்டை வெல்லம், கற்கண்டு

 

கொதி தண்ணீரில் சேர்ப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு பச்சரிசியையும், பாசிப் பருப்பினையும் சேர்த்து களைந்து தண்ணீரை வடித்து விடவும்.

 

 களைந்து தண்ணீர் வடிக்கப்பட்ட பச்சரிசி, பாசிப் பருப்பு
களைந்து தண்ணீர் வடிக்கப்பட்ட பச்சரிசி, பாசிப் பருப்பு

 

ஆறு பங்குத் தண்ணீரினை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.

 

தண்ணீரை கொதிக்க வைக்ககும் போது
தண்ணீரை கொதிக்க வைக்ககும் போது

 

பின் அதனுடன் ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பினைச் சேர்க்கவும்.

 

ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பினைச் சேர்க்கும் போது
ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பினைச் சேர்க்கும் போது

 

பாதியளவு கொதி தண்ணிரை தனியே எடுத்து வைக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

அவ்வப்போது அரிசி கிளறி விடவும். தேவைப்படும் நேரத்தில் எடுத்து வைத்துள்ள கொதி தண்ணீரைச் சேர்த்து சாதத்தை நன்கு வேக விடவும்.

 

சாதம் வேகும் போது
சாதம் வேகும் போது

 

 

நன்கு வெந்த சாதம்
நன்கு வெந்த சாதம்

 

சாதம் நன்கு வெந்து மசிந்தும் அதனுடன் தட்டி வைத்துள்ள கற்கண்டைச் சேர்க்கவும்.

 

கற்கண்டைச் சேர்க்கும் போது
கற்கண்டைச் சேர்க்கும் போது

 

ஒரு நிமிடம் கழித்து தட்டி வைத்துள்ள சர்க்கரையைச் சேர்க்கவும்.

 

சர்க்கரையை சேர்க்கும் போது
சர்க்கரையை சேர்க்கும் போது

 

சர்க்கரை மற்றும் கற்கண்டை சாதத்துடன் ஒரு சேரக் கலந்ததும் துருவி வைத்துள்ள தேங்காயைச் சேர்த்துக் கிளறவும்.

தனியே ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, கிசுமுசு பழத்தினை வறுத்துக் கொள்ளவும்.

 

முந்திரி, கிசுமுசுவை வறுக்கும் போது
முந்திரி, கிசுமுசுவை வறுக்கும் போது

 

தேங்காய் சேர்த்து ஓருரிரு நிமிடங்களில வறுத்த முந்திரிப் பருப்பு, கிசுமுசு பழம், நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

பின் அதனுடன் தட்டி வைத்துள்ள சுக்கு, ஏலக்காய் பொடியினைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். அடுப்பினை அணைத்து விடவும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

 

சர்க்கரைப் பொங்கல் இறக்கும் போது
சர்க்கரைப் பொங்கல் இறக்கும் போது

 

குறிப்பு

சர்க்கரை, கல்கண்டு சேர்க்கும் முன்பு சாதத்தினை மிகவும் கெட்டியாக தயார் செய்ய வேண்டும்.

பொங்கலுக்கு பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பினைச் சேர்த்து அளந்து அதனைப் போல் ஆறு மடங்கு இருக்குமாறு தண்ணீரை முதலில் கொதிக்க வைக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.