சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் குறைவு அல்லது இன்சுலின் வேலை செய்யாமை போன்ற குறைபாடு இருக்கும். இதன் அடிப்படையில் சர்க்கரை மாத்திரை இரு வகைப்படும். மேலும் மாத்திரைகள் இருவிதமாக செயல்படக் கூடியவை.
1. சல்பனில் யூரியா
இதில் டயாயனில்
யூகுளுக்கோன்
கினைனோஸ் போன்ற மாத்திரைகள் அடங்கும்.
இவ்வகை மாத்திரைகள் இன்சுலினை தூண்டி விடுகிறது. ஆகவே இந்த மாத்திரைகள் இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது.
2. பை குவனைடு
இதில் கிளைகோமட்
குளுபார்மின் போன்ற மாத்திரைகள் அடங்கும்.
இவ்வகை மாத்திரைகள் இன்சுலின் வேலை செய்யாமை எதிர்ப்பு சக்தி தன்மையை மாற்றக் கூடியது. பொதுவாக எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த மாத்திரை சர்க்கரையை குறைக்க உதவும்.
மாத்திரைகள் வேலை செய்வது, உங்கள் உடலில் எவ்வளவு இன்சுலின் உள்ளது என்பதை பொறுத்தது. இந்த மாத்திரைகள் இரண்டாவது வகை டயபடிஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும். முதல் வகை டயபடிஸ் உள்ளவர்களுக்கு மாத்திரைகள் பயனளிக்காது. கருத்தரித்திருப்பவர்கள் மாத்திரைகள் சாப்பிடக்கூடாது.
உங்கள் கவனத்திற்கு
உணவு முறையும், உடற்பயிற்சியையும் கடைபிடித்தால் மட்டுமே மாத்திரைகள் சர்க்கரையை குறைக்க உதவும்.
அதிக உணவு சாப்பிட்டு அதிக மாத்திரை சாப்பிடுவது தவறு. மாத்திரைகள் இன்சுலின் அல்ல.
மாதமொரு முறை இரத்தப் பரிசோதனை செய்து பார்த்து தேவைப்படும் மாத்திரையின் அளவை கூட்டவோ குறைக்கவோ மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
மாத்திரைகளால் கெடுதல் உண்டாகுமா?
பல ஆண்டுகள் மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டால் பாதிப்பு உண்டாகும் என்று பலர் எண்ணுகிறார்கள் இது தவறான எண்ணம். மாத்திரைகளால் பாதிப்பு உண்டாகாது.
இன்சுலின் உங்கள் நண்பன்
நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுக்களும் ஜீவித்திருக்கச் சதாகாலமும் சக்தி தேவைப்படுகிறது. இது நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே ஜீரணமானவுடன் குளுக்கோஸாக மாறி குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. குளுக்கோஸ் திசுக்களுக்குள்ளே நுழைந்தால்தான் திசுக்களுக்கு சக்தி கிடைக்கும், உள்ள நுழையவதற்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் இல்லாமல் குளுக்கோஸ் திசுக்களுக்குள்ளே நுழைந்து சக்தியாக மாற முடியாது.
இன்சுலின் என்ற ஹார்மோன் இயற்கையாகவே மனிதனின் வயிற்றுப் பகுதியில் உள்ள கணையம் என்ற உறுப்பிலிருந்து சுரக்கிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கூடும் பொழுது இன்சுலின் சுரப்பும் கூடிக்கொள்கிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் பொழுது இன்சுலின் சுரப்பும் குறைந்து கொள்கிறது.
சில பல காரணங்களால் நமது உடம்பில் இன்சுலின் சுரப்பது சிலருக்கு குறைந்து விடுகிறது. இதனால் நாம் சாப்பிடும் அளவுக்குத் தேவையான இன்சுலின் சுரக்காமல் குறைந்து, தானியங்கு முறை பழுதுபட்டு, இரத்தத்தில் வந்து சேரக்கூடிய குளுக்கோஸ் முழுமையாக சக்தியாக மாற்றப்பட்டு செலவாக்கப்படாமல், இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு உயர்ந்து கொண்டே போய் சர்க்கரை நோய் உண்டாக காரணமாகிறது.
இன்சுலின் யாருக்குத் தேவைப்படுகிறது?
1. முதல்வாக சர்க்கரை நோயாளிகளுக்கு
2. மாத்திரை கேட்காத பொழுது இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு
3. கர்ப்பிணிப் பெண்களுக்கு
4. அவசர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு
5. 10ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
6. சர்க்கரை நோயினால் பின் விளைவுகள் ஏற்பட்டவர்களுக்கு
7. சர்க்கரை நோய் தீவிர கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு
8. கண்ணுக்கு லேசர் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு
9. கிட்னியில் தொடர்ந்து உப்பு சத்து உள்ளவர்களுக்கு
10. நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு
11. இருதய பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டவர்களுக்கு
12. சர்க்கரை நோயினால் பின் விளைவுகள் ஏற்பட்டு உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உறுப்புகளின் நிலைமை மோசமாகாமல் தடுக்க இன்சுலினை விட்டால் வேறு மார்க்கமில்லை.
மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம்?
இன்சுலின் குறைபாட்டால் வருவதுதான் சர்க்கரை நோய். மாத்திரைகள் உங்கள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கின்றன. உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருந்தால் மட்டும் தான் மாத்திரை உங்கள் உடலுக்குள் வேலை செய்யும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஆனால் இன்சுலின் என்பது நேரடியாக சர்க்கரையை குறைக்க வல்லது. மாத்திரைகளால் இன்சுலின் குறைபாட்டை சரி செய்ய முடியாத போது இன்சுலின் போடுவதுதான் சிறந்த வழி.
ஒருமுறை இன்சுலின் ஊசி போட்டால் தொடர்ந்து போட வேண்டுமா?
ஒரு முறை ஊசி போட ஆரம்பித்து விட்டால் தொடர்ந்து இன்சுலின் ஊசி போட வேண்டும் என்பது பழைய கருத்து. சர்க்கரை கட்டுப்பட்டுக்கு வந்த பின்பு கண்டிப்பாக மாத்திரைக்கு மாறலாம் என்பது புதிய கண்டுபிடிப்பு.
இன்சுலின் போட்டால் நோய் முற்றிவிட்டது என்று அர்த்தமா?
தவறான கருத்து உண்மையை சொல்லப்போனால் மாத்திரை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தான் நோய் முற்றிய ஒரு நிலையை அடைகிறார்கள். இன்சுலின் போடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவசியம் ஏற்படும் பொழுது, தகுந்த சந்தர்ப்பத்தில் இன்சுலின் ஊசி போடுவதால் பல பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும்.
சர்கரைவியாதியைபற்றி,தெரியாதவர்களுக்கும்,தெரிந்துக்கொள்ளும்,வகையில்,எளிமையான,அருமையான,விளக்கம்,அளித்ததற்கு.மிகவும்,நன்றி.
எனக்கும் சர்க்கரைதான். மருத்துவர்கூட சொல்லாத விளக்கம். மிக்க நன்றி…