செயற்கைக் கோள் வாயிலான இணையதள சேவைக்கு உரிமம் அளிக்கும் முன் ஏற்பாடுகளை மத்திய அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
ஜியோ நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் இருவரும் இத்தகைய சாட்டிலைட் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களை ஏலம் மூலம் மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இப்பொழுது மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஏல முறையில் அல்ல; நிர்வாக ரீதியில் மட்டுமே அப்படிப்பட்ட சாட்டிலைட் இணையதள சேவை வழங்குபவர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை ஸ்டார் லிங்க் நிறுவனம் வாயிலாக சாட்டிலைட் இன்ட்டர்நெட் சேவையில் உலக அளவில் முத்திரை பதித்த தொழில் அதிபர் எலான் மஸ்க், தமது எக்ஸ் பக்கத்தில் வரவேற்றுள்ளார்.
நிர்வாக ஒதுக்கீடு என்ற வழிமுறை என்பது தகுதி வரம்பு அம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டு அவற்றை நிறைவு செய்யும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
2030 ஆம் ஆண்டுக்குள்ளாக செயற்கை கோள் இணையதள சேவை வர்த்தகத்தின் மதிப்பு இந்தியாவில் 16 இலட்சம் கோடியை எட்ட வாய்ப்பு உள்ளது.
ஸ்டார் லிங்க், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் களத்தில் குதிக்கும். வர்த்தகப் போட்டி அம்பானி மற்றும் மஸ்க் நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com