சாமை அடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 400 கிராம்

துவரம் பருப்பு – 100 கிராம்

பாசிப் பருப்பு – 50 கிராம்

கடலை பருப்பு – 100 கிராம்

உளுந்தம் பருப்பு – 150 கிராம்

காய்ந்த மிளகாய் – 4 எண்ணம்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – தேவையான அளவு

கருவேப்பிலை – சிறிதளவு

மல்லி இலை – சிறிதளவு

புதினா இலை – சிறிதளவு

 

செய்முறை

சாமை அரிசி மற்றும் பருப்பு வகைகளை இரண்டு மணிநேரம் ஊறவைத்து கொர கொரவென அரைக்கவும்.

மாவு தோண்டும் நேரத்தில் காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம், உப்பு, கருவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பின் அரைத்த மாவை அடையாக‌ தோசைக் கல்லில் ஊற்றி  அதன் மேல் புதினா இலையை தூவி பொன்னிறத்தில் எடுக்கவும். சுவையான சாமை அடை தயார்.