சாமை காரக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சாமை காரக் கொழுக்கட்டை அருமையான சிற்றுண்டி வகையைச் சார்ந்தது. சாமை என்பது சிறுதானிய வகைகளுள் ஒன்று.

ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.

சுவையான சாமை காரக் கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 150 கிராம் (1½ பங்கு)

துவரம் பருப்பு – 25 கிராம் ( ¼ பங்கு)

கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)

இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு

கல் உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

தண்ணீர் – 200 மில்லி லிட்டர் (2 பங்கு)

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

பெருங்காயப் பொடி – ½ ஸ்பூன்

சாமை காரக் கொழுக்கட்டை செய்முறை

முதலில் சாமையை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். துவரம் பருப்பை சிவக்க வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.

 

சாமையை வறுக்கும் போது
சாமையை வறுக்கும் போது

 

துவரையை வறுக்கும் போது
துவரையை வறுக்கும் போது

 

சாமை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை ஆறியவுடன் மிக்ஸியில் தனித்தனியே கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

 

கொர கொரப்பாக அரைக்கப்பட்ட சாமை அரிசி
கொர கொரப்பாக அரைக்கப்பட்ட சாமை அரிசி

 

கொர கொரப்பாக அரைக்கப்பட்ட துவரம்பருப்பு
கொர கொரப்பாக அரைக்கப்பட்ட துவரம்பருப்பு

 

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

கடலைப் பருப்பை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கறிவேப்பிலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின் அதனுடன் துருவிய தேங்காய், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 

தேங்காய், இஞ்சியை வதக்கும் போது
தேங்காய், இஞ்சியை வதக்கும் போது

 

கலவை நன்கு வதங்கியதும் கொர கொரப்பாக அரைத்த சாமை மற்றும் துவரம் பருப்பு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு சேரக் கலக்கவும்.

 

சாமை, துவரம்பருப்பு கலவையை சேர்த்ததும் போது
சாமை, துவரம்பருப்பு கலவையை சேர்த்ததும் போது

 

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி அத்துடன் கல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் மாவுக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி ஒரு சேரத் திரட்டவும்.

 

திரட்டப்பட்ட கொழுக்கட்டை மாவு
திரட்டப்பட்ட கொழுக்கட்டை மாவு

 

பின் அதிலிருந்து தேவையான அளவு மாவினை எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.

 

கொழுக்கட்டை பிடிக்கும் போது
கொழுக்கட்டை பிடிக்கும் போது

 

பின்னர் கொழுக்கட்டைகளை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

 

இட்லிபானையில் கொழுக்கட்டைகள்
இட்லிபானையில் கொழுக்கட்டைகள்

 

சுவையான சாமை காரக் கொழுக்கட்டை தயார்.

 

சுவையான சாமை காரக் கொழுக்கட்டை
சுவையான சாமை காரக் கொழுக்கட்டை

 

இதனை குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகவும் கொடுத்து அனுப்பலாம்.

குறிப்பு

குதிரை வாலி, வரகு அரிசியிலும் மேற்கூறிய முறையில் காரக் கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.