தேய்பிறை என்னை முழுமதியாக்கிட
அருள்புரிவாயே
சாய்பகவானே
வேய்குழல் நாதம்
வீசிடும் வண்ணம்
வாழ்வினை மாற்றிடு
சாய்பகவானே
தாயினும் சாலப்
பரிந்தெனைக்காத்திட
தடுத்தாட்கொள்வாய்
சாய்பகவானே
மாயிருள் அகற்றி
அறிவினை நிறுத்தி
மகிழ்வினைப் பெருக்கிடு
சாய்பகவானே
காய்கனி மலரென
உலகம் செழித்திட
கருணை புரிவாய்
சாய்பகவானே
பாய்ந்திடும் அருவி
பைம்பொழில் சோலை
பரவ வேண்டும்
சாய்பகவானே
மைந்நிற வானம்
மழையினைப் பொழிந்திட
அருள்பரிவாயே
சாய்பகவானே
கைமலர் தொழுது
நானுனைப்பாடிட
கருணைபுரிவாய்
சாய்பகவானே
நோய்நொடியில்லா
உலகினைத்தந்து
நலம்பெற அருள்வாய்
சாய்பகவானே
பொய்புரட்டில்லா
மானுட வாழ்க்கை
பரவிட அருள் செய்
சாய்பகவானே
மெய்தான் உன்னை
நாளும் பாடிட
நலமெனக்கருள்வாய்
சாய்பகவானே
அய்யா உந்தன்
அருளே எந்தன்
வழியாய் நிலைத்திட
அருள்புரிவாயே
சாய்பகவானே
செந்தூர்கவி